வேலைக்கு அமர்த்துபவர்களின் எதிர்பார்ப்புகள்

வேலை கிடைப்பது கடினம் என்று இளைஞர்கள் எப்போதும் கூறி வந்தாலும், வேலைக்கான விளம்பரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம்தான் உள்ளன. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் மூலமும், நாளிதழ்கள், இணையதளங்கள் வழியாகவும் வேலைக்கான அறிவிப்புகளை கண்டு விண்ணப்பிக்கும் வேலையும் தொடர்ந்து தடையில்லாமல் நடந்து வந்துகொண்டு இருக்கிறது.
வேலை இருக்கிறது என்றவுடன் விண்ணப்பிக்க தயாராகும் பலரும், நாம் அந்த வேலைக்கு தகுதியானவராக இருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. மேலும், பல வருடங்கள் வேலை தேடி விரக்தியடைந்த சிலர் எந்த வேலையையும் பார்க்கலாம் என்று, படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலைக்கும் செல்லத் தயாராகின்றனர்.
மக்கள் தொகை பெருகியிருக்கிறது, ஒரே துறையில் படித்தவர்களின் எண்ணிக்கை தேவையை விட அதிகமாகியிருக்கிறது என்பதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ, அதே போன்று இளைஞர்கள் தாங்கள் படித்த துறையில் மேம்பட்ட அறிவை வளர்த்துக்கொள்ளாததும், சரியான நேரத்தில் உகந்த வேலைக்கு விண்ணப்பிக்காததும், அதற்கேற்ற வகையில் தயாராகாததும் வேலை கிடைக்காதற்கு காரணமாகும்.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு சில சிறப்பு தகுதிகள், தேவைகள் இருந்தாலும் பெரும்பாலான நேர்முகத் தேர்வாளர்களிடம் இருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளையும், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எப்படி தயாராவது என்பதனையும் காண்போம்.
ஈடுபாடு மற்றும் உடனடி தேவை
ஒரு மாணவன் படிக்க தயாராகும்பொழுது இருக்கும் மனநிலை, படித்து முடித்த பின்னர் இருக்கும் மனநிலை ஆகியவற்றை வேலை தேடும்போது இருக்கும் மனநிலையோடு ஒப்பிடும்பொழுது தான் எடுத்த படிப்பு, எதிர்காலம் குறித்த எண்ணங்களில் மாற்றங்கள் இருக்கும்.
தனது குடும்ப சூழ்நிலை, தற்போதைய தேவைகள் ஆகியவற்றையும் தனது தொடர் ஈடுபாடு எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்து குறிப்பிட்ட வேலை தனக்கு சரியாக வருமா? என முடிவு செய்து விண்ணப்பியுங்கள். குறிப்பிட்ட வேலை குறித்து உங்களுக்கு தெளிவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே தொடர்புகொண்டு சந்தேகத்தினை கேளுங்கள். தயக்கம் வேண்டாம்.
தகுதிக்கேற்ற வேலைக்கு மட்டுமே விண்ணப்பியுங்கள்
நீங்கள் ஐ.டி.ஐ./ டிப்ளமோ / இளநிலை / பொறியியல் என எந்த படிப்பு படித்திருந்தாலும் நீங்கள் படித்த படிப்பிற்கான வேலைகளுக்கே விண்ணப்பியுங்கள். ஏனெனில் நேர்முகத் தேர்வாளர்கள் தாங்கள் எந்த அளவுகோல் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்பத்தான் திட்டமிடுவார்கள்.
மேலும், குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற தகுதியை விட அதிகமான தகுதிகள் பணியாளருக்கு இருக்கும்பொழுது, அந்த பணியாளரின் மனநிலையானது “தனக்கேற்ற வேலை இதுவல்ல, இது தனக்கு சாதாரணம்” என்ற நிலையில் இருக்கும். அதனோடு வேறு பணி கிடைத்தால் உடனடியாக வேலையை விட்டு நின்றுவிடுவர். இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வாளர்கள் பணிக்கு எடுக்கமாட்டார்கள்.
நேர்முகத்தேர்வாளர்களை அறிந்துகொள்ளுங்கள்
தங்களை நேர்முகம் செய்வது யார் என்பதை அறிந்துகொள்வது எளிதாக பதில் சொல்வதற்கு உதவியாக இருக்கும். எப்படியென்றால் ஒரு மனிதவள நிர்வாகி எதிர்பார்க்கும் பதிலுக்கும், வணிக நிர்வாகி உங்களிடம் எதிர்பார்க்கும் பதிலுக்கும் வித்தியாசங்கள் அதிகம். மனிதவள நிர்வாகி சிறந்த பதிலை உங்களிடம் எதிர்பார்ப்பார், ஆனால் வணிக மேலாளர் உங்களால் எவ்வளவு வருமானத்தை பெற முடியும் என்பதை கணக்கிட்டே உங்களுக்கான தேர்வை நடத்துவார்.
நீங்கள் திறமையான நபராக இருந்தாலும், சரியான நேரத்தில் சொல்லப்படாத பதில் வாய்ப்புகளை இழக்க மூல காரணமாகக்கூட அமையலாம்.
நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள்
உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகள், நீங்கள் சாதித்த சாதனைகள், உங்களால் செய்யக்கூடிய சிக்கலான பணிகள் போன்றவற்றை வெளிப்படுத்த தயங்காதீர்கள். ஏனெனில் அந்த சாதனைகள், திறமைகள் தான் உங்களை தனியே அடையாளப்படுத்தும்.
சாதிக்கக்கூடிய இளம் திறமைசாலிகளை நிறுவனங்கள் என்றுமே ஒதுக்குவதில்லை.
விருப்பங்களை தெரிவியுங்கள்
நேர்முகத்தேர்வுக்கு செல்லும் முன், அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். நிறுவனத்தின் இலட்சியம், அடுத்தடுத்து செயல்பட வைத்திருக்கும் செயல் திட்டங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து உங்கள் எண்ணங்கள், நிறுவனம் எப்படி எல்லாம் வளர வேண்டும் என நீங்கள் நினைக்கீறீர்களோ அதனை தெளிவாக தெரிவியுங்கள்.
நீங்கள் நிறுவனத்தின் மேல் வைத்திருக்கும் அக்கறை உங்கள் மேல் மரியாதையை ஏற்படுத்தும். நீங்கள் நிச்சயம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு காரணமாக அமையக்கூடும்.
நம்புங்கள்
எந்த நேர்முகத் தேர்வுக்கு சென்றாலும் தன்னம்பிக்கையோடு செல்லுங்கள். ஒரு வேளை நீங்கள் நேர்முகத்தேர்வில் திருப்திகரமாக செயல்படவில்லையென்றாலும், “இந்த நேர்முகத்தேர்வின் அனுபவத்தைக் கொண்டு அடுத்த நேர்முகத்தேர்வில் வெற்றி காண்பேன்” என நம்பிக்கை கொள்ளுங்கள்.
திருப்திகரமாக நேர்முகத்தேர்வு பங்குகொண்ட நிறுவனத்தில் இருந்து பதில் வரவில்லையென்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் தேர்ந்தெடுப்பவர்களின் மனநிலைகள் கூட வாய்ப்புகள் பெற முடியாததற்கு காரணமாக இருக்கலாம். அதற்காக நம்மிடம் திறமை குறைவு என்று தாழ்வு மனப்பான்மையில் உழள வேண்டாம்.
நம்பிக்கையோடு அடுத்தடுத்த சரியான முயற்சிகளில் இறங்குங்கள். வேலை உங்கள் வசமாகும்.

வேலையை தீர்மானிக்கும் காரணி

இது ஒரு முக்கியமான விஷயம் எந்த வேலை கொடுப்பவரும் உங்களுடைய டெக்னிக்கல் திறமை என்பது உங்களின் தேர்வை தீர்மனிக்கும் காரணியாக இருப்பது ஓரளவிற்க்குதான். அதில் சிறிது குறை இருந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் கற்கும் விசயங்களை எப்போது வேண்டுமானாலும் கற்று கொண்டு திறமையை அதிகப்படுத்தலாம். அதனால் உங்களுடைய Attitude எனப்படும் மனோபவத்தைதான் பெரிதாக பார்ப்பார்கள். பொதுவாக இது ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கும். உங்களுக்கு எவ்வளவு திறமையிருந்தாலும் சரியான மனோபாவம் இல்லையெனில் அந்த அலுவலகத்தில் நன்றாக வேலை செய்யமுடியாது.

தொழில்நுட்ப அறிவு = 30-40%

மனோபாவம் (Attitude) = 50-60%

மற்றவை (Others) = 10-20%

எனவே துறைசார்ந்த கேள்விகளை தவிர்த்து, இந்த பொதுவான கேள்விகளை எதிர்கொள்வதை பார்ப்போம்.
பெரும்பாலும் Attitude மற்றும் மற்ற சில விசயங்களை சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தை கொண்டு தீர்மானிக்கிறார்கள். அவற்றில் சில

Tell me about yourself?

பெரும்பாலான இடங்களில் இதுதான் முதல் கேள்வியாக இருக்கும். இதுதான் உங்களுடைய வெற்றிக்கு முதல் நுழைவாயில். இதை முன்பே தயார் செய்து கொள்ளுங்கள்.

சுருக்கமாக, படிப்பு, வேலை அனுபவம் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கவேண்டும்.

“ I’m XXX , B.com graduate passed out XXX with XX years of experience. Specialized on ____. Worked on XX as XX, YY company as YY……….

Why did you leave your last job?

என்ன காரணம் இருந்தாலும், கடைசி வேளையை பற்றி பொதுவாக நல்ல விசயமாகவே சொல்லுங்கள். உங்கள் பாஸை பற்றியும்(மரண கடியராக இருந்தாலும்) நல்ல விதமாக சொல்லுங்கள். எனென்றால் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரும் ஒரு பாஸ்தான். காரணமாக நல்ல விசயங்களை குறிப்பிடுங்கள் நல்ல வாய்ப்பு, நல்ல நிறுவனம், புதிய விசயங்கள் கற்று கொள்ள வாய்ப்பு, வேலை முன்னேற்றம் இப்படியாக ….

What experience do you have in this field?

உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள். முக்கியமாக உங்களுடைய அனுபவங்கள் இந்த புதிய வேலைக்கு எப்படி உதவும் என சொல்ல வேண்டும்.

உதா: உங்கள் பழைய ப்ராஜக்டில் புதிய வேலையைப்போன்றே ஒரு வேலை செய்ய நேர்ந்தது, இதே போன்ற வேலை செய்ய நேர்ந்தது இப்படியாக பல…..

What do you know about this organization?

இந்த நிறுவனத்தை பற்றி என்ன தெரியும்? என்ற இந்த கேள்விக்கு முன்னே, நீங்கள் நேர்முகத்தேர்வு வரும் முன்னரே அந்த நிறுவனத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது website இல்லாத கம்பெனிகளே இல்லை. எனவே அந்த கம்பெனிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தை பற்றிய நல்ல விசயங்களை சொல்லுங்கள். அதில் நிறுவனத்தை பற்றி

Nature of Business, Type of business, Management, Profit ( if Loss then don’t mention it), Future projection about the firm.

செய்யும் தொழில், செய்கின்ற விதம், எந்த வித மேலாண்மை, லாபம் ( நஷ்டம் என்றால் சொல்ல வேண்டாம் “ கடந்த வருடத்தில் 10% நஷ்டத்தில் போய்க்கொண்டு இருக்கும்” போன்றவற்றை தவிர்க்கவும்)

 

நேர்முகத் தேர்வு வியூகங்கள்….

நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை. இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும். அத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.

முக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்,

 •    உங்களின் தோற்றம்im
 •    உங்களின் பேச்சு
 •    உங்களின் நடத்தை

எனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.பொலிவான தோற்றம் நேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் பணி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஷேவ் செய்து, சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

நல்ல ஆடை Formal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.
ஆயத்தமாதல் நேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்! இன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.

கவனமாக பேசுங்கள் நேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

நம்பிக்கையுடன் பேசுங்கள் பேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.

நிதானமாக பேசுங்கள் படபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.

விவாதம் செய்யாதீர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ஆர்வமாக செயல்படுங்கள் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.சிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

 

நேர்காணலில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்.

best-interviewபடையும் அஞ்சும் பாம்புக்கு அஞ்சாவதர்கள் கூட “நேர்காணல்” என்று வரும் போது அவர்களின் நரம்புகளில் நடுக்கம் இயல்பாக வந்து விடுகிறது. இது தேவையில்லாத ஒன்று, முறையாக தன்னைதானே தாயார் படுத்துதல் மூலம் தேவையற்ற  அச்சங்களையும் , ஐயங்களையும் போக்கி  தேர்வில் எளிதாக  வென்றிட முடியும் .பொதுவாக நாம் “”நாங்கள் ஏன் உங்களை தேர்வு செய்ய வேண்டும்?”, “ மற்ற போட்டியாளர்களை விட நீங்கள் எவ்வாறு எங்கள் நிறுவனத்தில் பணியற்றுவீர்க்கள் ?”  , “உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?” ஆகிய பொதுவான கேள்விகளுக்கு எற்ற விடைகளை நாமே தயார் செய்து வைத்திருப்போம்.

ஒவ்வொரு நேர்காணல் அலுவலர் எதிர்பார்பது , கலந்துரையாடலைப் போன்றதொரு தேர்வைதான். நாம் முன்கூட்டியே இயந்திரத்தனமாக  பல பதில்களுக்குத் தாயார் செய்து விட்டு செல்வோமாயின் , தேர்வின் கலந்துரையாடல் என்ற நிலை மிகவும் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல், சில வேளைகலில் தேர்வை  இறுக்கமான நிலைக்கும் கொண்டு சென்றுவிடும். தேர்வில் , கேள்விகள் எவ்வாறு இருக்கும் என்பது நேர்காணல் நடத்தும் அதிகாரிக்கே தெரியும், சில வேளைகளில் மிகக் கடினமான கேள்வியோடு நேர்காணல் ஆரம்பித்து, பின், மெல்லிய கேள்விகளோடு நேர்காணல் இயல்பானதாக தொடரலாம்.

நேர்முகத் தேர்வாளர் நம்மிடம் 3 அடிப்படியான விடயங்களையே எதிர்பார்க்கிறார். அவை என்ன என்பதையும், அதை எவ்வாறு பல்வேறு வகையான கேள்விகள் மூலம் கேட்பார்கள் என்பதையும் பார்க்கலாம்.

 1. வேலைக்குத் தேவையான திறன்கள், அனுபவம் இருக்கிறதா ?
 2. நிறுவனதில் பணிசெய்ய உண்மையான ஆர்வம் உள்ளதா?
 3. நிறுவனத்தின் கலாச்சாரம், பணிசெய்யும் விதம், குழுக்கள் இவற்றுடன் ஒத்துப் போவீர்களா?

இவை மூன்றே , ஒவ்வோரு நேர்கமுகத் தேர்வரும் நம்மிடம் இருந்தது எதிர்பாக்கும் அடிப்படையான மற்றும் அவசியமான விடயங்கள். இது தொடர்பான கேள்விகளே உங்களிடன் விதவிதமாக பல கோணங்களில் கேட்கப்படும். அது எவ்வாறு என இனிக் காண்போம்.

 1. வேலைக்குத் தேவையான திறன்கள், அனுபவம் இருக்கிறதா ?

நீங்கள் விண்ணப்பிதிருக்கும் வேலைக்கு தேவையான திறன்கள் , அனுபவம் இவற்றை குறித்த கேள்விகள் இவை, இவற்றுள் சில,

 • உங்களைப்பற்றி சொல்லவும்?
 • உங்கள் பலம்/பலவீனம் என்ன?
 • நீங்கள் மற்ற போட்டியாளர்களை விட எங்களுக்கு என்ன செய்திட முடியும்?
 • நீங்கள் எப்படி இந்த வேலைக்குப் பொருத்தமானவர்?
 • இந்த வேலையில் இருக்கும் சாவல்கள் என்ன, எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?

இப்படிக் கேள்விகள் சென்று கொண்டே இருக்கும். இவ்வகையான கேள்விகள் உங்கள் திறன்கள் மற்றும் அனுபவத்தை தெரிந்து கொள்ள உதவும். உங்களிடம், இருக்கும் திறன்கள், அனுபவம், கடந்த காலத்தில் எதிர் கொண்ட சாவல்கள், உங்கள் திறன்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்ச்சிகள் ஆகியவற்றை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், இவ்வகையான கேள்விகளுக்கு எளிதாகவும், உண்மையாகவும், தயக்கம் இல்லாமலும் பதில் சொல்லிட முடியும்.

 1. நிறுவனத்தில் பணிசெய்ய உண்மையான ஆர்வம் உள்ளதா?

எந்த ஒரு நிறுவனமும், தன்னிடம் வேலை பார்க்கும் அலுவலர் உண்மையிலேயே வேலை பார்க்க ஆர்வம் உள்ளதா என தெரிந்துகொள்ள விழையும். நேர்முகத் தேர்வுக்கு முன்னர், நிறுவனம் என்ன செய்கிறது, அதன் குறிக்கோள்கள் என்ன, நிதி நிலைமை என்ன , அதன் கிளைகள், அதன் துணை நிறுவனங்கள் , கடந்த கால வெற்றிகள்  போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

 • எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 • எங்களின் துனை நிறுவனங்கள் எவை?
 • உங்களை நிறுவனத்தில் சேர ஊக்கப்படுத்துவது எது?

போன்றவை நிறுவனத்தின் மீதான உங்கள் ஆர்வத்தை தெரிந்து கொள்ள உதவும் சில கேள்விகள்.

 1. நிறுவனத்தின் கலாச்சாரம், பணிசெய்யும் விதம், குழுக்கள் இவற்றூடன் ஒத்துப் போவீர்களா?

இது கடைசியான மிகவும் அடிப்படியான மற்றும் அவசியமான விடயங்களுல் ஒன்று. ஒரு நிறுவனம் பல்வேறு மாநிலங்கள், நாடுகள், கண்டங்களில் கிளைகள் இருக்கலாம், பல்வேறு நாடுகள் அல்லது கண்டங்களை சேர்ந்தவர்கள் பணிபுரியலாம் . அவர்களோடு உங்களால் ஒத்து போக முடியுமா, நீங்கள் வேலை பார்க்கும் விதம், நிறுவனத்தோடு ஒத்துப் போகுமா, நீங்கள் நிறுவனத்திற்கும், வேலைக்கும் பொருத்தமானவராக இருப்பீர்களா என்பனவே இங்கு தேர்வர் தெரிந்து கொள்ள விழையும் விடயங்கள்.

 • உங்கள் வேலை செய்யும் விதம் என்ன ?
 • உங்களை விவரியுங்கள்?
 • உங்களை பற்றி சக அலுவலர் சொல்வதென்ன?
 • நீங்கள் எவ்வாறு நிறுவனத்துடன் பொருந்துவீர்கள?,
 • குழுமனப்பான்மை எவ்வாறு இருக்க வேண்டும் ?
 • ஆகியன, இவ்விடயத்தை தெரிந்து கொள்ள கேட்கப்படும், கேள்விக்கணைகளுல் சில.
 • ஆக, பொத்தாம் பொதுவாக கேள்விகளுக்கு பதில்களை மனப்பாடம் செய்யாமல், வேலை மற்றும் நிறுவனத்திற்கு நீங்கள் எவ்வாறு பொருத்தமாக இருப்பீர்கள் என்பதை சுய பரிசோதனை செய்தால் எவ்விதமான தேர்வையும் எதிர் கொள்ளலாம்.

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு,

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் வேலைக்கு பணியிடங்கள் உருவாவது சாத்தியம் இல்லைதானே. இதனால் தான் அனைவருக்கும் உடனே வேலை கிடைப்பதில்லை.

ஒரு பத்து சதம் பேருக்குதான் InfoSys, TCS, CTS போன்ற பெரு நிறுவனங்களில் Campus Interview ல் வேலை கிடைக்கிறது. மீதி 90% பேருக்கு SME என்ற Small Medium Enterprises, குறு, சிறு நிறுவனங்களே வாய்ப்பளிக்கின்றன.

இந்த மாதிரியான குறு, சிறு, மத்திய நிறுவனங்களில் Fresherகளை வேலைக்கு எடுப்பதால் வரும் சில பிரச்சனைகளைப் பார்ப்போமா?

பயிற்சி

பெரு நிறுவனங்கள் போல இவை Fresherகளின் பயிற்சிக்கென 6 மாத காலம், இடம், ஆசிரியர்களைத் தர முடியாது.

ஓரிரு வாரங்கள் தருவதே கடினம்.

NIIT போன்ற பெரிய தனியார் கணிணி பயிற்சி நிறுவனங்களில் 6 மாத படிப்பிற்கு ஏறக்குறைய 1 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டும் மாணவர்கள், அதை விடுத்து சிறு நிறுவனங்களில் சேர்ந்தால், அதே பயிற்சிக்கு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்.

இலவச பயிற்சி, நகரின் மத்தியில் கட்டிடம், குளிர் சாதனம், கணிணி, இணையம், தடையற்ற மின்சாரம் தந்து, சம்பளமும் தருவதற்கு, நிறுவனங்கள் ஒன்றும் தொண்டு அமைப்புகள் இல்லையே.

சரி. அப்படியே சில மாத இலவசப் பயிற்சி அளித்தாலும், இந்த மாணவர்கள் தமது திறனை வெளிப் படுத்த, இன்னும் 6 மாதம் ஆகிறது. இப்படியே ஒரு வருடம் ஓடி விடுகிறது.

ஒரு வருடம் கழிந்த பின், நீங்கள் பெரு நிறுவனங்களில் வேலை செய்யம் நண்பரோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்.

“அவனுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கும் அதே அளவு சம்பளம், வெளிநாட்டு வாய்ப்புகள் வேண்டும்”

என்று கூறி, வேலையை விட்டு நீங்கி, வேறு நிறுவனம் போகின்றீர்.

உங்களை நம்பி, வாடிக்கையாளரிடம் புதிய பணிகளை ஏற்றுக் கொண்ட நிறுவனம், மீண்டும் பணியாளரை தேடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதே போல் பலரும் செய்வதால்தான், நிறுவனங்கள் Fresher ஐ வேலைக்கு எடுக்க பயப்படுகின்றன.

ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள ஆட்களை வேலைக்கு எடுத்தால், ஓரிரு வாரங்கள் பயிற்சி மட்டுமே போதும். மூன்றாம் வாரத்திலேயே வேலை செய்யத் தொடங்கி விடுவர். நிறுவனத்திற்கும் உற்பத்தி கிடைத்துவிடும். இவர் ஒரே ஆண்டில் வேலையை விட்டாலும், நிறுவனத்திற்கு பெரிய இழப்பு இல்லை. ஒரு ஆண்டில் தந்த ஊதியத்திற்கு, தேவையான உழைப்பு கிடைத்திருக்கும்.

இதுவே Fresher ஐ வேலைக்கு எடுத்தால், பயிற்சியும் தந்து, சம்பளமும் தந்து, மிகவும் குறைந்த உற்பத்தி பெறும் நிலையே ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு சொல்வீர்கள்?

நாளை நீங்களே ஒரு நிறுவனம் தொடங்கினால், உங்களுக்கும் இதே நிலை தானே ஏற்படும்? எப்படி சமாளிப்பீர்கள்?

“எல்லாம் சரிதான். வேலை கிடைத்தால்தானே அனுபவம் பெறுவது. வேலையே கிடைக்காமலும், அனுபவம் இல்லாமலும் இருக்கிறோமே!” என்கிறீர்களா? அதுவும் சரிதான்

அறிவும் திறமையும்

அறிவும் திறமையும் அனுபவமும் வேலையில் சேர்ந்த பிறகு மட்டுமே வருவது அல்லவே. நாமே வளர்த்துக் கொள்ள வேண்டியது. சரிதானே?

பெரும்பாலான மாணவர்கள் சொல்வது என்ன? “எனக்கு ஒரு வேலை கொடுங்கள். பிறகு நான் தேவையானதைக் கற்றுக் கொள்கிறேன். அதற்குப் பிறகு, திறமையை வளர்த்துக் கொள்கிறேன்”. உண்மைதானே.

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அடிக்கடி வெளியூர் செல்ல கார் வாங்குகிறீர்கள். நல்ல கார் ஓட்டுனர் தேட்கிறீர்கள். நான் உங்களிடம் நேர்முகத் தேர்விற்கு வந்துள்ளேன். கார் டிரைவிங் வகுப்பு சென்றுள்ளேன். ஆனால் கார் ஓட்டிய அனுபவம் இல்லை.

“நான் பயிற்சி முடித்துள்ளேன். சான்றிதழ் வைத்துள்ளேன். ஆனால் அனுபவம் இல்லை. என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புது காரை என்னிடம் கொடுங்கள். முடிந்தால் சில மாதம் பயிற்சியும் கொடுங்கள். நன்கு கற்றுக் கொண்டு, பழகிய பின், பிறகு உங்கள் குடும்பத்தினரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்கிறேன்.”

இப்படி சொன்னால் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்வீர்களா? ஆனால் இப்படித் தானே நீங்களும் நிறுவனங்களிடம் சொல்கிறீர்கள்?

கார் ஓட்டிப் பழகவாவது சில லட்சங்களில் கார் வாங்க வேண்டும். கணிணியில் திறமையை வளர்க்க உங்களிடம் உள்ள கணிணியே போதுமே.

கிரிக்கெட்டில், மட்டையை சும்மாவே வைத்திருந்தால், சச்சினாக இருந்தாலும் நமக்கு கோபம் வருகிறதே. தொடர்ந்து ரன் எடுக்கவும், அடிக்கடி 4, 6 என அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் மட்டும் கணிணியை வைத்துக் கொண்டு, மென்பொருள் எதுவும் உருவாக்காமல், பாட்டு கேட்டு, படம் பார்த்து, விளையாடிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் அரட்டை அடிப்பீர்கள். என்ன நியாயம் இது?

நேர்முகத் தேர்வு

என் நிறுவனத்திற்கு ஒரு 100 Fresher வேண்டும் என விளம்பரம் செய்தால், குறைந்தது 1000 பேராவது Resume அனுப்புகின்றனர். எல்லா Resumeகளிலும் பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்.

“எனக்கு C, C++, Java, Oracle, HTML, CSS, Javascript, VB, DotNet, ASP, Photoshop, Windows போன்றவை தெரியும்.”

இவ்வாறு பல நுட்பங்கள் தெரிந்த Fresherகளை வைத்து எந்த வகை மென்பொருட்களையும் எளிதாக உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது. இவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்போம்.

“வணக்கம் தம்பி!”

“வணக்கம் சார்!”

“உங்களுக்கு என்னென்ன தெரியும்?”

“கணிணியில் எல்லா நுட்பங்களும் தெரியும். C, C++, Java, DotNet, Oracle…இத்யாதி!”

“ஓ! மிக்க மகிழ்ச்சி! என்ன Project செய்துள்ளீர்கள்?”

“அதுவா சார்!. போன மாதம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினார்களே. அதற்கு தேவையான மென்பொருள் ஒன்று செய்தேன். Cloud Computing ல் Fuzzy Logic ம் Artificial Intelligence ம் சேர்த்து Android, iOS ல் இயங்கும்

ஒரு மென்பொருளை செய்துள்ளேன்.”

“மிக்க மகிழ்ச்சி! என் கடைக்குத் தேவையான ஒரு வரவு/செலவு மென்பொருளை நீங்களே செய்து தர முடியுமா?”

“நானேவா? அது கஷ்டம் சார். இன்னும் நிறைய படிக்க வேண்டும். எனக்கு வேலை கொடுங்கள். பிறகு படித்து பிறகு செய்து கொடுக்கிறேன்.”

“ஏன் உங்களால் முடியாது? நீங்களேதானே உங்கள் பெரிய Project ஐ செய்தீர்கள்? அதைப்பற்றி கூட விரிவாக விளக்கினீர்களே.”

“அதுவா சார். அது வந்து… அது வந்து… பிராஜெக்ட் நான் செய்யவில்லை.”

“பின்னே? யார் செய்தார்கள்?”

“தியாகராய நகரில் ஒரு பிராஜெக்ட் சென்டரில் 10,000 ரூபாய்க்கு வாங்கினோம். ஆனால் அது பற்றி எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை கொடுங்கள். தேவையானவற்றை நன்கு கற்று, பிறகு செய்து கொடுக்கிறேன்.”

இப்படித்தான் 100க்கு 95 பேர் சொல்கின்றனர். வெகு சிலரே தாமாக சொந்த பிராஜெக்ட் செய்து, புது மென்பொருள் உருவாக்கும் திறனையும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

இவ்வாறு அடிப்படை திறன் கூட இல்லாதவருக்கு எப்படி வேலை தருவது?

மருத்துவம் படித்துவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்பவரிடம் எப்படி நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்கள்?

அதே போல் தானே கணிணி படிப்பும்?

கல்வியில் மிகவும் அடிநிலை என்பது ITI. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால் கூட ITI சேரலாம். ITIல் வெல்டிங் பற்றி இரு ஆண்டுகள் படித்து முடித்த மாணவரிடம், நமது வீட்டிற்கு ஒரு இரும்பு கதவு செய்து தரச் சொல்லலாம். அவரும் மறுக்காமல் செய்து தருவார்.

12வது முடித்து, 3 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகள் கணிணி பற்றி விரிவாகப் படித்து வரும் கணிணி மாணவருக்கு மட்டும் ஒரு குட்டி மென்பொருள் கூட சுயமாக உருவாக்கத் தெரியாது.

எதுவுமே தெரியாமல் வரும் மாணவருக்கு வேலை தர நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை. Reference, Campus Interview, Off Campus என வேலை கிடைப்போர் பத்து சதம் மட்டுமே. மீதியுள்ளோர் தமது திறமை மூலம் மட்டுமே வேலை தேட வேண்டியுள்ளது

அனுபவம்/திறமை பெறுவது எப்படி?

ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டு, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவது. “இந்திய கிரிக்கெட் குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள்!.. பிறகு விளையாட்டை கற்றுக் கொண்டு, பிறகு சிறப்பாக விளையாடி, பிறகு இந்தியாவிற்கு கோப்பை வாங்கித் தருகிறேன்.” என்று யாருமே சொல்வதில்லை.

கிரிக்கெட்டில் திறமை பெற, மட்டையை எடுத்து பயிற்சி செய்ய வேண்டும். கணிணியில் திறமை பெற, பயிற்சி செய்தாலே போதுமே.

கணிணி மென்பொருள் உருவாக்கும் அனுபவம் பெறத் தேவையானவை ஒரு கணிணியும், இணைய இணைப்பும் மட்டுமே.

பின்வரும் எல்லாவற்றையும் செய்தாலே அனுபவம் தானாய் கிடைக்கும்.

 1. Syllabus தாண்டி கற்றுக் கொள்க.

GNU/Linux, PHP, Python, Ruby, MySQL என பல நுட்பங்களை கற்றுக் கொள்க.

 1. Tech குழுக்களில் சேர்க.

ஊரில் உள்ள Tech குழுக்களில் சேர்க. குழு இல்லையென்றால் தொடங்குக. அடிக்கடி சந்தித்து புது விஷயஙுகளை கற்றுக் கொள்க.

 1. GNU/Linux பயன்படுத்துக.

உலகமே GNU/Linux ஐ விரும்பி வரவேற்கிறது. உங்களிடம் உள்ள விண்டோஸை அழித்துவிட்டு, உபுண்டு, டெபியன், ஃபெடோரா என ஏதாவது ஒரு லினக்ஸை நிறுவுங்கள். Commandline பயன்படுத்தும் போது எக்கச்சக்க புது விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

 1. மென்பொருள் மூல நிரல் படியுங்கள்.

குனு/லினக்ஸில் எல்லா மென்பொருட்களுக்கும் source code கிடைக்கும். அவற்றை பதிவிறக்கம் செய்து சும்மாவேனும் திறந்து படித்துப் பாருங்கள்.

 1. மென்பொருள் உருவாக்குங்கள்.

சின்ன கால்குலேட்டர் செய்யுங்கள். முகவரிப் புத்தகம் ஒன்று. இணைய இணைப்பை சோதனை செய்யும் கருவி, ஒரு அலாரம், ஒரு Backup செய்யும் மென்பொருள், Web scrapping மென்பொருள் என குட்டி குட்டியாக பல மென்பொருள் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஓரிரு நாளே ஆகும்.

பிறகு உங்களை சுற்றியுள்ளோரிடம் கேட்டு, அவர்களுக்கு தேவையான மென்பொருளை செய்து கொடுங்கள். கடைகளுக்கு தேவையான Billing, Accounts, Attendance என பல மென்பொருட்கள் தேவைப்படும். அவற்றை இலவசமாகவே செய்து கொடுங்கள்.

6.Version Control கற்றுக் கொள்க.

Source Code ஐ பலருடனும் இணைந்து பகிர்ந்து வேலை செய்ய Version Control System பயன்படுகிறது. Subversion (SVN), GIT கற்றுக் கொள்ளுங்கள். http://github.com -ல் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி, உங்கள் மென்பொருட்கள் யாவற்றையும் இங்கு சேருங்கள். பிறர் உருவாக்கிய மென்பொருட்களுக்கும் பங்களியுங்கள். உங்கள் Facebook Profile ஐ விட github Profile ஏ உங்கள் வளர்ச்சியை தீர்மானிக்கும்.

 1. கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களியுங்கள்

உங்களுக்கு பிடித்தமான கட்டற்ற மென்பொருளுக்கு பங்களியுங்கள். ஒரு வரி நிரல் தந்தாலும் அது பெரிய விஷயமே. நிரல் மட்டுமின்றி ஆவணமாக்கம், படம், IRC, Forum, Mailing list ஆகியவற்றில் உதவி, Packaging, பரப்புரை செய்தல், மொழிமாற்றம் செய்தல் என ஏதாவது ஒரு வகையில் பங்களியுங்கள். “How to contribute to Open Source Software?” என்று தேடுங்கள். பிடித்த மொழியில், பிடித்த மென்பொருளுக்கு உதவுங்கள்.

 1. வலைப்பதிவு எழுதுங்கள்

நீங்கள் செய்ய்ம் எல்லாவற்றையும் உங்கள் வலைப்பதிவில் எழுதுங்கள். தினமும் விடாமல் எழுதுங்கள். உங்களின் மிகச்சிறந்த Visiting Card ஆக உங்கள் வலைப்பதிவு அமையும்.

 1. Resume-ல் இவை எல்லாவற்றையும் சேருங்கள்.

உங்கள் வலைப்பதிவு, உங்கள் github முகவரி, நீங்கள் பங்களிக்கும் கட்டற்ற மென்பொருட்கள், Syllabus தாண்டி நீங்கள் கற்றுக் கொண்ட நுட்பங்கள், இவற்றையெல்லாம் உங்கள் Resume-ல் சேருங்கள்.

 1. வேலை கேட்காதீர்கள், Project Work கேளுங்கள்.

உங்களுக்கு தெரிந்தோரிடமெல்லாம் வேலை கேட்டு நச்சரிக்காதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவைப்படும் மென்பொருளை செய்து தருவதாய் சொல்லுங்கள். Project Work ஆக செய்யுங்கள்.

படித்து முடித்து, பின் சும்மாவே வேலை மட்டும் தேடிக் கொண்டிருந்தால், ஒரு வருடம் ஓடியே விடும். அதற்குள் அடுத்த ஆண்டு மாணவர்கள் வெளியே வந்து Fresher ஆகி விடுவர். நீங்கள் Fresher ஆகவும் இல்லாமல், வேலையும் இன்றி, அனுபவமும் இன்றி மிகவும் குழம்பி நிற்பர்.

இந்த ஒரு ஆண்டில், மாதம் ஒரு Project என பத்து, பன்னிரண்டு Projectகளை நீங்களே செய்து விட்டால், அதையே ஒரு ஆண்டு அனுபவமாக சொல்லலாம். Freelancer என்று தைரியமாக உங்கள் Resume ல் அறிவிக்கலாம்.

ஒரு ஆண்டு அனுபவம் உள்ளது என்றே அறிவித்து வேலை தேடுங்கள். பிறகு பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை. நிஜமாகவே அனுபவம் இருப்பதால், நேர்முகத்தேர்வும் மிக எளிதாகவே இருக்கும்.

பல Project கள் செய்யும் போது, வணிக ரீதியான மென்பொருட்களை உருவாக்கி பணமும் சம்பாதிக்கலாம். நல்ல குழுவினர் கிடைத்தால், தனியாக நிறுவனமும் தொடங்கலாம்.

உழைப்பும் திறமையும் இருந்தால் போதும். வானமே உங்கள் எல்லைதான்.

எனதருமை சச்சின்களே. 50களையும் 100களையும் சச்சின் குவித்தது போல, மென்பொருட்களை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களித்து, உங்கள் திறமையால், சுடர்விடும் சூரியனாய் மிளிருங்கள்.

வாழ்த்துக்கள்.

இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

http://ilugc.in

http://fsftn.org

http://opensource.com/…/…/4/ten-ways-participate-open-source

http://teachingopensource.org/…/How_to_start_contributing_t…

http://blog.smartbear.com/…/14-ways-to-contribute-to-open-…/

http://goinggnu.wordpress.com/…/what-to-do-after-learning-…/

 

வேலை வாய்ப்புக்கான இணையதளங்கள்.

imagesவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!
Job websites – Job websites வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள். Continue reading வேலை வாய்ப்புக்கான இணையதளங்கள்.

நேர்காணலுக்கு போறீங்களா?

 • எந்த இடத்துக்கு இன்டர்வியூ போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டு செல்லுங்கள்.

 

 • இன்டர்வியூ நடக்குமிடத்துக்குப் பத்து நிமிடம் முன்னதாகப் போனாலும் தப்பில்லை. ஒரு நிமிடம் தாமதமாகப் போனாலும், அது உங்களுக்குக் கரும்புள்ளிதான்.

 

 • உங்களது டிரெஸ் ரொம்பவும் முக்கியம். பளபளா டிரெஸ், மூச்சை அடைக்கும் சென்ட், கண்ணைப் பறிக்கும் மேக்கப் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, எளிமையாக, அதே சமயம் அழகாகச் செல்லுங்கள்.

 

 • படபடப்பு இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது. சிரித்த முகத்துடன் காட்சியளியுங்கள்.

 

 • இன்டர்வியூவில் உங்கள் முன் இருக்கிற அத்தனை பேருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, அவர்கள் சொன்ன பிறகே இருக்கையில் அமர வேண்டும்.
  பேசும் போது எல்லாரையும் பார்த்துப் பேச வேண்டியது முக்கியம். இன்டர்வியூவில் கேட்கப்படுகிற கேள்விக்கு முழுமையான, தெளிவான பதில் தர வேண்டியது அவசியம்.