சாதனை பெண்மணி நிவேதிதா

பெயர் – நிவேதிதா ஆறுமுகச்சாமி

ஊர் – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்

பெற்றோர் – திரு. கு. ஆறுமுகச்சாமி , திருமதி. ச.உஷா

பள்ளி படிப்பு – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, எட்டயபுரம்.

பட்ட படிப்பு – B.Tech (Hons.), VIT University, Vellore.

2011 ம் வருடம் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றதால் உலக புகழ் பெற்ற VIT பல்கலைகழகத்தில் உள்ள STARS (Supporting The Advancement of Rural Students) திட்டத்தின் மூலமாக எனது பொறியியல் படிப்பை முற்றிலும் இலவசமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 7 வருடங்கள் தமிழ் வழியில், பெண்கள் பள்ளியில் படித்துவிட்டு பெண்கள் தேர்ந்தெடுக்க தயங்கும் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்து படித்தேன். உலக நாடுகள் பலவற்றிலிருந்து மாணவர்கள் என்னுடன் படித்ததால் எனது ஆங்கிலம் வெகுவாக மெருகேறியது. 4 வருட முடிவில் 45,000ரூ சம்பளத்தில் 2 வேலையும் Young India Fellowship admission letter ம் கையில் இருந்தது . 2 வேலைகளையும் உதறிவிட்டு Young India Fellowship ல் சேர்ந்தேன் . காரணம் பொறியியல் துறை மட்டும் அல்லாது மற்ற அனைத்து கலை துறைகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னை அவ்வாறு செய்ய வைத்தது.

நான் நினைத்ததை போலவே இங்கு நான் தினம் தினம் புதிதாக பிறப்பதை போல் உணர்கிறேன். காரணம் நான் இது வரை என் வாழ்க்கையில் செய்ய முயற்சிக்காததை இங்கு முயற்சிக்கிறேன் . உதாரணமாக ஓவியம் வரைகிறேன், கதை எழுதுகிறேன் , குறும் படம் எடுக்கிறேன் , பல துறை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நான் யார் என்பதை உணர்கிறேன். முயன்றால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக இங்கு  உணர முடிகிறது. இது எல்லாவற்றிக்கும் காரணம் நான் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நன்றாக பயன்படுத்திக்கொண்டேன் , எதற்கும் தயங்கவில்லை.

இதை முடித்துவிட்டு IPS ஆக வேண்டும் என்பது எனது லட்சியம். IPS அதிகாரியாக வேலை பார்த்துக்கொண்டே இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு . மிக முக்கியம் நான் பிறந்த மண்ணிற்கும் படித்த பள்ளிக்கும் என்னால் இயன்றதைச் செய்யவேண்டும் .

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமான நிவேதிதா நாம் அனைவருக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளக்குகிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s