பெயர் – செந்தில் குமார்
ஊர் – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம்.
பெற்றோர் – திரு.கௌரிசங்கர் , திருமதி. செந்தமிழ்ச்செல்வி.
பள்ளிப்படிப்பு – SSM Lakshmi Ammal Matric. Hr. Sec. School, Komarapalayam
பட்டப்படிப்பு – B.E. Mechanical Engineering – College of Engineering Guindy, Anna University – 2008-12
ஆராய்ச்சி படிப்பு – M.S. (By Research) – Thermal Energy Storage – Anna University (Jan 2013 – Dec 2015)
- Visiting Research Student – School of Chemical Engineering, Univ of Birmingham, UK (Jan – Apr 2015)
வேலை – Project Associate , AU- FRG Institute for CAD/CAM, Anna University (May 2012 – June 2015)
குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்து எனது அண்ணன்களின் சீரிய முயற்சியால் எனது பள்ளிகல்வியை ஆங்கிலவழியில் படித்து முடித்து, பட்டப்படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து எனது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆனேன். பொறியியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம் இருந்ததால் அண்ணா பல்கலைகழகத்திலயே வேலை பார்த்துக்கொண்டு எனது ஆராய்ச்சிப்படிப்பையும் முடித்தேன். எதன் ஒரு பகுதியாக வெளிநாட்டிக்குச்சென்று ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
நல்ல ஈடுபாடுகொண்ட ஒரு ஆசிரியரால் மட்டுமே இந்த சமுதாயத்தை மாற்ற இயலும் என்று உணர்ந்தபோதுதான் என் மனதில் பல்கலைக்கழகத்தோடு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவி நல்ல கல்வியாளராக ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்த மையம் வெளியாட்களை கொண்டு அல்லாமல் முற்றிலும் மேல்படிப்பு பயிலும் மாணவர்களை கொண்டதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் திறன்மிகு பேராசிரியர்களைக் கொண்டு அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இது மாணவர்களுக்கு தொழிற்சாலைகளோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்பாக அமையும். அத்துடன் நம்மால் பணத்தையும் சேமிக்க இயலும்.
அதற்கான வாய்ப்புக்களை தேடியபோது தான் Young India Fellowship-ல் சேரும் வாய்ப்பும் வந்தது. நான் நினைத்ததற்கும் மேலாக இங்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியாளர்களுடன் உரையாடும், பலதுறை மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து பின்னாளில் என்னை ஒரு நல்ல கல்வியாளனாக இந்த சமுதாயத்தில் உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்.
Congratulations! ! Happy to see hardworking and extremely dedicated youth frm d rural background reaching such great heights..keep going..
LikeLike
Thank you so much for your Support.
LikeLike
Superb thought brother…nice one !! I hope it will leave a impact on me…
LikeLike
Thank You so much. Senthil is indeed a role model for all of us
LikeLike
Superb thought brother…nice one!!..hope it will leave a impact on me..!
LikeLike
Good. Keep going…
LikeLike