நேர்காணலில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்.

best-interviewபடையும் அஞ்சும் பாம்புக்கு அஞ்சாவதர்கள் கூட “நேர்காணல்” என்று வரும் போது அவர்களின் நரம்புகளில் நடுக்கம் இயல்பாக வந்து விடுகிறது. இது தேவையில்லாத ஒன்று, முறையாக தன்னைதானே தாயார் படுத்துதல் மூலம் தேவையற்ற  அச்சங்களையும் , ஐயங்களையும் போக்கி  தேர்வில் எளிதாக  வென்றிட முடியும் .பொதுவாக நாம் “”நாங்கள் ஏன் உங்களை தேர்வு செய்ய வேண்டும்?”, “ மற்ற போட்டியாளர்களை விட நீங்கள் எவ்வாறு எங்கள் நிறுவனத்தில் பணியற்றுவீர்க்கள் ?”  , “உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?” ஆகிய பொதுவான கேள்விகளுக்கு எற்ற விடைகளை நாமே தயார் செய்து வைத்திருப்போம்.

ஒவ்வொரு நேர்காணல் அலுவலர் எதிர்பார்பது , கலந்துரையாடலைப் போன்றதொரு தேர்வைதான். நாம் முன்கூட்டியே இயந்திரத்தனமாக  பல பதில்களுக்குத் தாயார் செய்து விட்டு செல்வோமாயின் , தேர்வின் கலந்துரையாடல் என்ற நிலை மிகவும் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல், சில வேளைகலில் தேர்வை  இறுக்கமான நிலைக்கும் கொண்டு சென்றுவிடும். தேர்வில் , கேள்விகள் எவ்வாறு இருக்கும் என்பது நேர்காணல் நடத்தும் அதிகாரிக்கே தெரியும், சில வேளைகளில் மிகக் கடினமான கேள்வியோடு நேர்காணல் ஆரம்பித்து, பின், மெல்லிய கேள்விகளோடு நேர்காணல் இயல்பானதாக தொடரலாம்.

நேர்முகத் தேர்வாளர் நம்மிடம் 3 அடிப்படியான விடயங்களையே எதிர்பார்க்கிறார். அவை என்ன என்பதையும், அதை எவ்வாறு பல்வேறு வகையான கேள்விகள் மூலம் கேட்பார்கள் என்பதையும் பார்க்கலாம்.

 1. வேலைக்குத் தேவையான திறன்கள், அனுபவம் இருக்கிறதா ?
 2. நிறுவனதில் பணிசெய்ய உண்மையான ஆர்வம் உள்ளதா?
 3. நிறுவனத்தின் கலாச்சாரம், பணிசெய்யும் விதம், குழுக்கள் இவற்றுடன் ஒத்துப் போவீர்களா?

இவை மூன்றே , ஒவ்வோரு நேர்கமுகத் தேர்வரும் நம்மிடம் இருந்தது எதிர்பாக்கும் அடிப்படையான மற்றும் அவசியமான விடயங்கள். இது தொடர்பான கேள்விகளே உங்களிடன் விதவிதமாக பல கோணங்களில் கேட்கப்படும். அது எவ்வாறு என இனிக் காண்போம்.

 1. வேலைக்குத் தேவையான திறன்கள், அனுபவம் இருக்கிறதா ?

நீங்கள் விண்ணப்பிதிருக்கும் வேலைக்கு தேவையான திறன்கள் , அனுபவம் இவற்றை குறித்த கேள்விகள் இவை, இவற்றுள் சில,

 • உங்களைப்பற்றி சொல்லவும்?
 • உங்கள் பலம்/பலவீனம் என்ன?
 • நீங்கள் மற்ற போட்டியாளர்களை விட எங்களுக்கு என்ன செய்திட முடியும்?
 • நீங்கள் எப்படி இந்த வேலைக்குப் பொருத்தமானவர்?
 • இந்த வேலையில் இருக்கும் சாவல்கள் என்ன, எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?

இப்படிக் கேள்விகள் சென்று கொண்டே இருக்கும். இவ்வகையான கேள்விகள் உங்கள் திறன்கள் மற்றும் அனுபவத்தை தெரிந்து கொள்ள உதவும். உங்களிடம், இருக்கும் திறன்கள், அனுபவம், கடந்த காலத்தில் எதிர் கொண்ட சாவல்கள், உங்கள் திறன்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்ச்சிகள் ஆகியவற்றை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், இவ்வகையான கேள்விகளுக்கு எளிதாகவும், உண்மையாகவும், தயக்கம் இல்லாமலும் பதில் சொல்லிட முடியும்.

 1. நிறுவனத்தில் பணிசெய்ய உண்மையான ஆர்வம் உள்ளதா?

எந்த ஒரு நிறுவனமும், தன்னிடம் வேலை பார்க்கும் அலுவலர் உண்மையிலேயே வேலை பார்க்க ஆர்வம் உள்ளதா என தெரிந்துகொள்ள விழையும். நேர்முகத் தேர்வுக்கு முன்னர், நிறுவனம் என்ன செய்கிறது, அதன் குறிக்கோள்கள் என்ன, நிதி நிலைமை என்ன , அதன் கிளைகள், அதன் துணை நிறுவனங்கள் , கடந்த கால வெற்றிகள்  போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

 • எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 • எங்களின் துனை நிறுவனங்கள் எவை?
 • உங்களை நிறுவனத்தில் சேர ஊக்கப்படுத்துவது எது?

போன்றவை நிறுவனத்தின் மீதான உங்கள் ஆர்வத்தை தெரிந்து கொள்ள உதவும் சில கேள்விகள்.

 1. நிறுவனத்தின் கலாச்சாரம், பணிசெய்யும் விதம், குழுக்கள் இவற்றூடன் ஒத்துப் போவீர்களா?

இது கடைசியான மிகவும் அடிப்படியான மற்றும் அவசியமான விடயங்களுல் ஒன்று. ஒரு நிறுவனம் பல்வேறு மாநிலங்கள், நாடுகள், கண்டங்களில் கிளைகள் இருக்கலாம், பல்வேறு நாடுகள் அல்லது கண்டங்களை சேர்ந்தவர்கள் பணிபுரியலாம் . அவர்களோடு உங்களால் ஒத்து போக முடியுமா, நீங்கள் வேலை பார்க்கும் விதம், நிறுவனத்தோடு ஒத்துப் போகுமா, நீங்கள் நிறுவனத்திற்கும், வேலைக்கும் பொருத்தமானவராக இருப்பீர்களா என்பனவே இங்கு தேர்வர் தெரிந்து கொள்ள விழையும் விடயங்கள்.

 • உங்கள் வேலை செய்யும் விதம் என்ன ?
 • உங்களை விவரியுங்கள்?
 • உங்களை பற்றி சக அலுவலர் சொல்வதென்ன?
 • நீங்கள் எவ்வாறு நிறுவனத்துடன் பொருந்துவீர்கள?,
 • குழுமனப்பான்மை எவ்வாறு இருக்க வேண்டும் ?
 • ஆகியன, இவ்விடயத்தை தெரிந்து கொள்ள கேட்கப்படும், கேள்விக்கணைகளுல் சில.
 • ஆக, பொத்தாம் பொதுவாக கேள்விகளுக்கு பதில்களை மனப்பாடம் செய்யாமல், வேலை மற்றும் நிறுவனத்திற்கு நீங்கள் எவ்வாறு பொருத்தமாக இருப்பீர்கள் என்பதை சுய பரிசோதனை செய்தால் எவ்விதமான தேர்வையும் எதிர் கொள்ளலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s