யங் இந்தியா ஃபெல்லோஷிப்

download

உலகை மாற்ற வேண்டும் என்று கனவு காண்பவரா நீங்கள்?

தற்போதைய சூழ்நிலையின் சவால்களைச் சந்திக்கும் வகையில் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

ரோல் மாடல்கள் என்று கருதப்படும் மிகச் சிறந்த தொழில் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் ரிசர்ச் அண்ட் எஜிக்கேஷன் அமைப்புடன் இணைந்து, தில்லியில் உள்ள அசோகா யுனிவர்சிட்டி இந்த ஃபெல்லோஷிப்பை வழங்குகிறது.

 

மாணவர்களுக்கான இந்த ஓராண்டு முதுநிலைப் படிப்பு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் என்ஜினீயரிங் அண்ட் அப்ளைடு சயின்ஸ், கார்லெட்டன் கல்லூரி, பிரான்சில் உள்ள சயின்சஸ்போ ஆகிய கல்வி நிறுவனங்களுடன் அசோகா பழ்கலைக்கழகம் இணைந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகச் சிறந்த தகுதி படைத்த மாணவர்கள், போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்தரமான கல்வியைப் பெற இயலாத நிலையில் உள்ளனர். அதுபோன்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவே இந்த ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.

 

ஹிஸ்டாரிக்கல் பெர்ஸ்பெக்டிவ், பிகேவியரல் சயின்சஸ், சொசைட்டி அண்ட் பாலிடிக்ஸ், எகனாமிக்ஸ்டடீஸ், ஆங்கில இலக்கியம், ஸ்டடீஆஃப் பிலாசபி, கற்றுத்தரப்படும். அத்துடன் தொழில்முனைவோர் பயிற்சி, தலைமைப் பண்பு மற்றும் மேலாண்மை, அனலிட்டிக்கல் திங்கிங், மீடியா அண்ட் கம்யூனிக்கேஷன், எஸன்சியல் மார்க்கெட்டிங், ஃபைனான்சியல் டெசிஷன் மேக்கிங் அண்ட் பிளானிங் ஆகியவை குறித்தும் மாணவர்களுக்குப் பாடங்கள் இருக்கும்.

 

இளநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இளநிலைப் பட்டப் படிப்பையோ அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பையோ முடித்து இரண்டு ஆண்டுகளுக்குள் வேலை அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 

இந்தப் படிப்புத் திட்டம் ஆங்கில வழியில் நடத்தப்படுவதால், அந்த மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

மற்றவர்களுக்கு உதவி புரிவதிலும் சேவை செய்வதிலும் மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதிலும் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவரா என்பது குறித்தும் அவரது தகவல் தொடர்புத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதையெல்லாம் தேர்வு செய்யும் நிபுனர்குழு கவனிக்கும்.

 

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலமும் அதைத் தொடர்ந்து நேரிலும் நேர்காணல் நடத்தப்படும். மாணவர்களின் தகுதியின் அடிப்படையில் இந்த ஃபெல்லோஷிப் படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

 

ஃபெல்லோஷிப் குறித்த விவரங்களுக்கு இதன் இணைய தளத்தைப் பார்க்கவும்.

 

http://www.youngindiafellowship.com

 

 

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை

‘பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன’ என்கிறார் தத்துவஞானி பேக்கன்.

நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

தன்னுடைய அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற பெரிய பதவியை அடைந்தார் காமராஜர். ஏழைக் குடும்பத்திலே பிறந்த ஜஸ்டீஸ் முத்துச்சாமி ஐயர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறினார். படிப்படியாக உயர்ந்து சென்னை உயர்நீதிமன்றநீதிபதியானார்.

வாழ்க்கையின் பெரிய முட்டுக்கட்டையாக ஏழ்மை இருக்கிறதே என்று எண்ணி சோர்வு அடையாதீர்கள். முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை. முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள்.