அரசு வேலைக்கு உதவும் இணையதளங்கள் :-

அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::
———————————————————-
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in

இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

 

TNPSC தேர்வுகள் எழுதும் போது கவனிக்க வேண்டியவை

TNPSCதேர்வில் வெற்றி பெற முதலில் பொதுத்தமிழை நன்றாகப்படித்துக்கொள்ளுங்கள் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது .
§  General Tamil -க்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களைப் படிப்பதே போதுமானது.
§ பலர் கடைசி வாரத்தில் தான் படிக்க வே ஆரம்பிக்கிறார்கள். அது தவறு.
§ TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தேர்வு அறிவிப்பு வெளிவந்த பின் படித்துக் கொள்ளலாம் என மெத்தனமாக இருப்பதே தவறு.
§ TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு ஒதுக்க வேண்டும். பாடங்களை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும்.
§ முக்கியமானவை எனத் தோன்றும் பகுதிகளை Notes எடுத்துக் கொள்ளலாம்.
§ தினசரி செய்தி தாள் படிக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் News பார்க்கலாம்.
முக்கிய செய்திகள் வெளிவந்தால் தேதி குறிப்பிட்டு ஒரு Note-ல் குறித்து வைத்துக் கொள்ளவும்.
இப்படிச் செய்தால் Year Books தேடி கடை கடையாக அலைவது கூட அவசியமில்லை.
§ கடைசி வாரத்தில் புதிய பாடங்களை படிக்கவே கூடாது. படித்தபாடங்களை திரும்பத்  படிக்க வேண்டும். அதாவது
Revise செய்ய வேண்டும்.

அரசு தேர்வுக்கு தயாராவது எப்படி.

130729000952_group-2---group-4தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக, உங்களை தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள். எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் போன்ற சில தகவல்கள் இதோ.

தேர்வுகளுக்காக நீங்கள், தனியாக கைடு, புத்தகம் என்று எதையும் வாங்க வேண்டிய தேவையில்லை. பதிலாக, குரூப் 4-க்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களையும், குரூப் 2-க்கு அதோட சேர்த்து +1,+2 வரலாறு, புவியியல் புத்தகங்களை படித்தாலே போதுமானது.அடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண் வழங்குகிறார்கள் என்பதை பார்ப்போமா.

குரூப் 2, மற்றும் குரூப் 4 தேர்வுகளில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 1/2 மதிப்பெண் என மொத்தம் 300 மதிபெண்னுக்கு தேர்வு நடைபெறும்.

பாடவாரியாக மதிப்பெண் விவரம் :

பொது தமிழ் – 100 கேள்விகள்

அறிவியல் 20 கேள்விகள்

கணக்கு – 10 கேள்விகள்

வரலாறு – 10 கேள்விகள்

புவியியல் – 10 கேள்விகள்

பொருளியல் – 10கேள்விகள்

பொது அறிவு – 20 கேள்விகள்

இதர கேள்விகள் – 10 கேள்விகள்

எந்தெந்த பாடங்களில் எந்தெந்த பகுதியை நன்றாக படிப்பது :

பொது தமிழ் பாடத்தில், அ-ஒள வரைக்குமான பாடத்திட்டமும்; அகர வரிசை, ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், இலக்கணக் குறிப்பு, உவமையால் விளக்கப்படுதல், எதிர்ச்சொல்;

சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள், ஐ.நா., சார்க் அமைப்புகள், வங்கி, தமிழ்நாடு ஆறுகள்… இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும்.

கணக்கு பாடத்தில் முக்கோணவியல், எண்ணியல், அளவிடல், பகுமுறை வடிவியல், வடிவியல்; குரூப் 2-க்கு கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு…இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே கூடாது.

பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது.

அதிகமாக படித்து, ஒன்றும் தெரியாமல் போவதைவிட, தேர்ந்தெடுத்த புத்தகங்களை படித்து, நிறைவாக எழுத்துகள் வெற்றி நிச்சயம்.

அரசு வேலையினால் அடையும் நன்மைகள் :-

இன்றைய வளர்ந்து வரும் இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஏன் ? மக்களின் மத்தியில் அரசு வேலை குறித்த இந்த மோகம்.

அரசு வேலை என்பது நிரந்தரமானது,

பல சலுகைகள் கிடைக்கும்,

தாராளமான சம்பளம்,

60-வயதுக்குப் பின் பென்ஷன்… இவைகள் யாவும் பொதுமக்களின் அடிமனதில் நன்கு பதிந்தவைகளில் முக்கியமானதாக கருதலாம்.

ஆனால் அதுமட்டுமின்றி  நீங்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், வங்கிபணியாளர், தொழில்முனைவோர் சிறந்த பேராசிரியர், அரசு உயர் அதிகாரி, இராணுவ அதிகாரி, காவல்துறை அதிகாரி, ஊழல் தடுப்பு அதிகாரி இது போன்ற உயர்பதவிகளை வகிப்பதால் விளையும் நன்மைகளைப் பற்றி சிலவற்றை பார்போம்.

  • நீங்கள் நினைத்ததை சாதிக்கும் அதிகாரம் உங்கள் கையில் வந்துசேரும்.
  • பொருளாதார ரீதியில் உங்கள் வாழ்வு ஏற்றம் பெரும்.
  • சமுதாயத்தில் உங்களுடைய சுயமதிப்பும், அந்தஸ்தும் உயரும்.
  • வெற்றியும், புகழும் உங்களை வந்தடையும்.
  • உங்களை உதாசினப்படுத்தியவர்களும், அவமானப்படுத்தியவர்களும் உங்களை தலை நிமிர்ந்து பார்ப்பார்கள்.
  • உங்கள் பெற்றோர்களும், உங்களுடைய நண்பர்களும் உங்களை நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.
  • நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலெல்லாம் உங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
  • நீங்கள் அடையும் வெற்றியினால் உங்கள் வருங்கால சந்ததிகள் பயன்பெறுவார்கள்.
  • உங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன்னுதாரமாக இருப்பீர்கள்.
  • உங்கள் கல்லூரிகளுக்கும், உங்கள் கிராமத்திற்கும் நீங்கள் ஒரு வெற்றியாளர்களாகத் தோன்றுவீர்கள்.
  • உங்களைப் போன்று கிராமச் சூழ்நிலையிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பீர்கள்.
  • நீங்கள் கற்பனை செய்த ஒரு சிறந்த வாழ்க்கையை உங்களால் வாழமுடியும்.
  • உங்களைப் போன்று கனவுகாணும் ஒவ்வொருவருக்கும் உங்களின் வெற்றி நம்பிக்கையைத் தரும். ­­­­­
  • மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • உங்களின் வெற்றி உங்களுடைய பெற்றோர்களுக்கு மன நிறைவையும், சந்தோசத்தையும் உண்டாக்கும்.
  • உங்கள் உறவினர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும்.
  • உங்கள் தலைமைப்பண்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும்.  

இதனை தொடர்ந்து அரசு வேலைக்கு எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து வரும் தினங்களில் பார்போம்.

நீங்களும் அரசு வேலைக்காக முயற்சிக்கிறீர்களா உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்……

ஃபேர் & லவ்லி பவுண்டேஷன் வழங்கும் உதவி தொகைகள் :-

ஃபேர் & லவ்லி உதவி தொகை :-

பெண்கள் தங்கள் லட்சிய கனவை நோக்கி பயணித்து தன் வாழ்வில் முன்னேற, தனக்கென ஓர் அடையாளத்தை இந்த உலகில் உருவாக்கக் ஃபேர் லவ்லி பவுண்டேஷன் வழங்கும் உதவி தொகை.

கல்வி உதவி  தொகை :-

பெண்கள் இளங்கலை பட்டபடிப்பு, முதுநிலை பட்டபடிப்பு, மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ள ஃபேர் & லவ்லி பவுண்டேஷன்  கல்வி உதவி தொகை வழங்குகிறது.

குறைந்தபட்ச கல்வி தகுதி +2.

மாணவர்கள் தங்களது 10,12 தேர்வில்  குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 60% பெற்றிருக்க வேண்டும்.

இந்த உதவி தொகை இந்தியருக்கு மட்டும்.

தொழில் துவங்கும் பெண்களுக்கு :-

தொழில் துவங்க விரும்பும் பெண்கள் கண்டிப்பாக 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10,12 தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தொழில் துவங்க விரும்பும் பெண்கள்  அந்த தொழில் குறித்த 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய குடியரிமை பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை :-

இந்த உதவி தொகையை பெற ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

Fair & Lovely Foundation,

Hindustan Unilever House B.D. Sawant Marg,

Chakala,

Mumbai – 400099

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை :-

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை எவ்வளவு?

உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினரின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்புகளுக்கு தகுந்தாற்போல இந்த உதவித்தொகை மாறுபடும். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து இளங்கலை பட்டப் படிப்பு, ஆசிரியர் படிப்பு படிக்கும் உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் மகனுக்கு ஆண்டுக்கு ரூ.1,750, மகளாக இருந்தால் ரூ.2,250 வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் மகனாக இருந்தால் ரூ.2,000, மகளாக இருந்தால் ரூ.2,500 வழங்கப்படுகிறது. முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மகனுக்கு ரூ.2,250, மகளுக்கு ரூ.2,750, விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்கு ரூ.3,250, மகளாக இருந்தால் ரூ.3,750 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

மருத்துவம் போன்ற தொழில்சார் கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை, பொறியியல், சட்டம் போன்ற தொழில்சார் (Professional) படிப்பு பயிலும் மகனுக்கு ஆண்டுக்கு ரூ.2,250, மகளுக்கு ரூ.2,750, விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்கு ரூ.3,250, மகளுக்கு ரூ.3,750 வழங்கப்படுகிறது. அதுபோல மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் முதுநிலை தொழில்சார் கல்வி பயில்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,250, மகளாக இருந்தால் ரூ.4,750, விடுதியில் தங்கிப் பயில்பவராக இருந்தால் ரூ.6,250, மகளாக இருந்தால் ரூ.6,750 வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்புகளுக்கும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை :-

 பாலிடெக்னிக் படிக்கும் மகனுக்கு ரூ.1,250, மகளுக்கு ரூ.1,750 வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,450, மகளாக இருந்தால் ரூ.1,950 வழங்கப்படுகிறது. இதே அளவிலான உதவித்தொகை ஐடிஐ மற்றும் ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு படிக்கும் மகன், மகளுக்கும் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை உட்பட அனைத்து உதவித்தொகைகளும் மகன், மகள் மட்டுமின்றி இறந்த மகனின் வாரிசுகளுக்கும் வழங்கப்படும்.

பிசி, எம்பிசி, சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி யார் தொழிற்கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டின் கீழ்) பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இதன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிக்டெனிக்குள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில், பி.எச்.டி., தொழிற்கல்விகள் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மர பினர் மாணவ-மாணவியர்கள் அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை பெற விண்ணப் பிக்கலாம்.

இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், திரும்ப பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் என வழங்கப்படும் இந்த உதவி தொகைக்கு விண் ணப்பிப்பவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். குடும் பத்தில் யாரும் பட்டதாரியாகவோ அல்லது டிப்ளோமா பயிலாத வராகவோ இருக்க வேண்டும்.

மேலும், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் உண்டு மற்றும் உறைவிடம் விடுதிகளில் தங்கி பயிலும் பி.சி., எம்.பி.சி., மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மிகாமல் இருக்கும் பட்சத்தில் உணவு மற்றும் தங்கும் இடவசதிக்கான செலவினம், தொழிற்கல்வி பயில்வோருக்கு மாதந்தோறும் ரூ. 350 வீதமும், முதுகலைக் கல்வி வரை பயில் வோருக்கு ரூ. 225 வீதமும் வழங்கப்படும்.

கல்வி உதவி தொகை பெறு வதற்கான விண்ணப்பப் படிவங் களை, மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெற்றோ அல்லது http://www.tn.gov.in/bcmbcdept என்ற இணைய தள முகவரியிலும் படியிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன், கல்வி நிலையங் களில் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, திரு வள்ளூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை மாணவர்கள் அணுகலாம்.

தன்னார்வ அமைப்புகளின் கல்வி உதவித் தொகைகள்

இதுவரை அரசு வழங்கி வரும் கல்வி உதவி தொகை பற்றி பார்த்தோம். இப்போது பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கும்  சில கல்வி உதவித் தொகை பற்றி பார்போம் .

தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு

சென்னை, சேத்துப்பட்டில் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறது. கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:  044-28361825

ஆனந்தம் யூத் ஃபெடரேஷன்

சென்னை, கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஆனந்தம் யூத் ஃபெடரேஷன், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் உள்ள, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: 044-45588555, 9551939551

பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்

உலக அளவில் செயல்பட்டு வரும் ‘பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்’ என்ற  தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பார்வைத் திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.brightfuture fortheblind.org

பிரீகத் பாரதீய சமாஜ்

மும்பையைச் சேர்ந்த இந்த அமைப்பு +2 முடித்து முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்குகிறது. +2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://swascholarships.blogspot.in/2012/07/shri-brihad-bharatiya-samaj.html

மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை……..

 

மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.

images (3)தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும்.

அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும்.

இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி.

இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: http://www.nhfdc.nci.in

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை

சபள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.

இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது. அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.

பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.
இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக்  வேண்டிய மாதம் : ஜூலை
மேலும் விவரங்களுக்கு: http://www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm
இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதம்: செப்டம்பர்
மேலும் விவரங்களுக்கு: http://www.momascholarship.gov.in