இதுவரை அரசு வழங்கி வரும் கல்வி உதவி தொகை பற்றி பார்த்தோம். இப்போது பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கும் சில கல்வி உதவித் தொகை பற்றி பார்போம் .
தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு
சென்னை, சேத்துப்பட்டில் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறது. கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: 044-28361825
ஆனந்தம் யூத் ஃபெடரேஷன்
சென்னை, கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஆனந்தம் யூத் ஃபெடரேஷன், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் உள்ள, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: 044-45588555, 9551939551
பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்
உலக அளவில் செயல்பட்டு வரும் ‘பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்’ என்ற தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பார்வைத் திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.brightfuture fortheblind.org
பிரீகத் பாரதீய சமாஜ்
மும்பையைச் சேர்ந்த இந்த அமைப்பு +2 முடித்து முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்குகிறது. +2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://swascholarships.blogspot.in/2012/07/shri-brihad-bharatiya-samaj.html