அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி யார் தொழிற்கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டின் கீழ்) பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இதன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிக்டெனிக்குள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில், பி.எச்.டி., தொழிற்கல்விகள் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மர பினர் மாணவ-மாணவியர்கள் அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை பெற விண்ணப் பிக்கலாம்.
இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், திரும்ப பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் என வழங்கப்படும் இந்த உதவி தொகைக்கு விண் ணப்பிப்பவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். குடும் பத்தில் யாரும் பட்டதாரியாகவோ அல்லது டிப்ளோமா பயிலாத வராகவோ இருக்க வேண்டும்.
மேலும், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் உண்டு மற்றும் உறைவிடம் விடுதிகளில் தங்கி பயிலும் பி.சி., எம்.பி.சி., மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மிகாமல் இருக்கும் பட்சத்தில் உணவு மற்றும் தங்கும் இடவசதிக்கான செலவினம், தொழிற்கல்வி பயில்வோருக்கு மாதந்தோறும் ரூ. 350 வீதமும், முதுகலைக் கல்வி வரை பயில் வோருக்கு ரூ. 225 வீதமும் வழங்கப்படும்.
கல்வி உதவி தொகை பெறு வதற்கான விண்ணப்பப் படிவங் களை, மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெற்றோ அல்லது http://www.tn.gov.in/bcmbcdept என்ற இணைய தள முகவரியிலும் படியிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன், கல்வி நிலையங் களில் சமர்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, திரு வள்ளூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை மாணவர்கள் அணுகலாம்.