ஃபேர் & லவ்லி உதவி தொகை :-
பெண்கள் தங்கள் லட்சிய கனவை நோக்கி பயணித்து தன் வாழ்வில் முன்னேற, தனக்கென ஓர் அடையாளத்தை இந்த உலகில் உருவாக்கக் ஃபேர் லவ்லி பவுண்டேஷன் வழங்கும் உதவி தொகை.
கல்வி உதவி தொகை :-
பெண்கள் இளங்கலை பட்டபடிப்பு, முதுநிலை பட்டபடிப்பு, மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ள ஃபேர் & லவ்லி பவுண்டேஷன் கல்வி உதவி தொகை வழங்குகிறது.
குறைந்தபட்ச கல்வி தகுதி +2.
மாணவர்கள் தங்களது 10,12 தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 60% பெற்றிருக்க வேண்டும்.
இந்த உதவி தொகை இந்தியருக்கு மட்டும்.
தொழில் துவங்கும் பெண்களுக்கு :-
தொழில் துவங்க விரும்பும் பெண்கள் கண்டிப்பாக 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10,12 தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் துவங்க விரும்பும் பெண்கள் அந்த தொழில் குறித்த 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய குடியரிமை பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை :-
இந்த உதவி தொகையை பெற ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
Fair & Lovely Foundation,
Hindustan Unilever House B.D. Sawant Marg,
Chakala,
Mumbai – 400099