இன்றைய வளர்ந்து வரும் இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஏன் ? மக்களின் மத்தியில் அரசு வேலை குறித்த இந்த மோகம்.
அரசு வேலை என்பது நிரந்தரமானது,
பல சலுகைகள் கிடைக்கும்,
தாராளமான சம்பளம்,
60-வயதுக்குப் பின் பென்ஷன்… இவைகள் யாவும் பொதுமக்களின் அடிமனதில் நன்கு பதிந்தவைகளில் முக்கியமானதாக கருதலாம்.
ஆனால் அதுமட்டுமின்றி நீங்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், வங்கிபணியாளர், தொழில்முனைவோர் சிறந்த பேராசிரியர், அரசு உயர் அதிகாரி, இராணுவ அதிகாரி, காவல்துறை அதிகாரி, ஊழல் தடுப்பு அதிகாரி இது போன்ற உயர்பதவிகளை வகிப்பதால் விளையும் நன்மைகளைப் பற்றி சிலவற்றை பார்போம்.
- நீங்கள் நினைத்ததை சாதிக்கும் அதிகாரம் உங்கள் கையில் வந்துசேரும்.
- பொருளாதார ரீதியில் உங்கள் வாழ்வு ஏற்றம் பெரும்.
- சமுதாயத்தில் உங்களுடைய சுயமதிப்பும், அந்தஸ்தும் உயரும்.
- வெற்றியும், புகழும் உங்களை வந்தடையும்.
- உங்களை உதாசினப்படுத்தியவர்களும், அவமானப்படுத்தியவர்களும் உங்களை தலை நிமிர்ந்து பார்ப்பார்கள்.
- உங்கள் பெற்றோர்களும், உங்களுடைய நண்பர்களும் உங்களை நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.
- நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலெல்லாம் உங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
- நீங்கள் அடையும் வெற்றியினால் உங்கள் வருங்கால சந்ததிகள் பயன்பெறுவார்கள்.
- உங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன்னுதாரமாக இருப்பீர்கள்.
- உங்கள் கல்லூரிகளுக்கும், உங்கள் கிராமத்திற்கும் நீங்கள் ஒரு வெற்றியாளர்களாகத் தோன்றுவீர்கள்.
- உங்களைப் போன்று கிராமச் சூழ்நிலையிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பீர்கள்.
- நீங்கள் கற்பனை செய்த ஒரு சிறந்த வாழ்க்கையை உங்களால் வாழமுடியும்.
- உங்களைப் போன்று கனவுகாணும் ஒவ்வொருவருக்கும் உங்களின் வெற்றி நம்பிக்கையைத் தரும்.
- மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.
- உங்களின் வெற்றி உங்களுடைய பெற்றோர்களுக்கு மன நிறைவையும், சந்தோசத்தையும் உண்டாக்கும்.
- உங்கள் உறவினர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும்.
- உங்கள் தலைமைப்பண்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும்.
இதனை தொடர்ந்து அரசு வேலைக்கு எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து வரும் தினங்களில் பார்போம்.
நீங்களும் அரசு வேலைக்காக முயற்சிக்கிறீர்களா உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்……