முயன்றால் முடியாதது எதுவும் இல்லை

‘பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன’ என்கிறார் தத்துவஞானி பேக்கன்.

நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

தன்னுடைய அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற பெரிய பதவியை அடைந்தார் காமராஜர். ஏழைக் குடும்பத்திலே பிறந்த ஜஸ்டீஸ் முத்துச்சாமி ஐயர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறினார். படிப்படியாக உயர்ந்து சென்னை உயர்நீதிமன்றநீதிபதியானார்.

வாழ்க்கையின் பெரிய முட்டுக்கட்டையாக ஏழ்மை இருக்கிறதே என்று எண்ணி சோர்வு அடையாதீர்கள். முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை. முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள்.